சுஷாந்திற்கு இசை அஞ்சலி செலுத்தினார் ரஹ்மான்

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்கிற்கு இசைப்புயல் A.R. ரஹ்மான் உள்ளிட்ட பல இசைக் கலைஞர்கள் இணைந்து இணைய வாயிலாக இசை அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

சுஷாந்த் சிங் நடிப்பில் உருவாகிய ‘தில் பேச்சாரா’ படத்திற்கு ரஹ்மானே இசை அமைத்திருந்தார்.

இந்த நிலையில், சுஷாந்த் சிங் அண்மையில் தற்கொலை செய்துகொண்டார்.

சென்னையில் உள்ள தனது கலையகத்தில் ரஹ்மான் பாடலொன்றைப் பாட அவரது மகனும் மகளும் இசைக்கருவிகளை வாசித்துள்ளனர்.

அதேபோல், ஷ்ரேயா கோஷல் உள்ளிட்ட பலரும் தமது இசை அஞ்சலிகளை இணைய வாயிலாக செலுத்தியுள்ளனர்.

 

Sharing is caring!