சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி கணவருக்கு கொடுத்த பரிசு

சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ் அண்மையில் பிறந்த நாளினை மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ளார்.

அவரின் மனைவியான சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி பிறந்தநாளுக்கு அவர் சற்றும் எதிர்பார்க்காத பரிசு ஒன்றினை கொடுத்து இன்ப அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.

இசைஞானி இளையராஜாவிடம் ஆர்மோனியப் பெட்டியில் கையொப்பம் வாங்கி பிறந்தநாள் பரிசாக கொடுத்துள்ளார். அதனை பார்த்த அடுத்த நொடி சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ் மகிழ்ச்சியின் உச்சத்தில் மெய் மறந்து போயுள்ளார்.

இதேவேளை, அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அவர்கள் அனைவரும் சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ் மகிழ்ச்சியுடன் நன்றி கூறியுள்ளார்.

Sharing is caring!