‘சூப்பர்  டீலக்ஸ்’  ……இயக்குனர் வருத்தம்

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘சூப்பர்  டீலக்ஸ்’  திரைப்படத்தை பார்த்த பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் கஷ்யப், தான் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனதை எண்ணி வருந்துவதாக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் குமரராஜா ஒரு இரக்கமற்ற, பயமற்ற திறமையான இயக்குநர்.  இவரிடம் நிறைய விஷயங்கள் உள்ளது  என கூறியுள்ளார்.

ஏற்கனவே விஜய் சேதுபதி குரலில் வெளியான இப்படத்தின் டிரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், பிரபல பாலிவுட் இயக்குன‌ரது கருத்து  ‘சூப்பர் டீலக்ஸ்’  படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

மேலும்  ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படத்தை  தியாகராஜன் குமாரராஜா இயக்கியுள்ளார்.  இப்படத்தில் விஜய்சேதுபதி, சமந்தா, மிஷ்கின், ரம்யாகிருஷ்ணன், காயத்ரி, பகவதி பெருமாள், உள்பட பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் மார்ச் 29ம் தேதி திரைக்குவர உள்ளது.

Sharing is caring!