சூப்பர் டீலக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு… படக்குழு அறிவிப்பு

சென்னை:
சூப்பர் டீலக்ஸ் படத்தின் டிரைலர் இன்று வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் டிரைலர் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

‘ஆரண்ய காண்டம்‘ படத்துக்குப் பின் 8 ஆண்டுகள் கழித்து தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. இதில் விஜய் சேதுபதி ஷில்பா என்கிற திருநங்கை கதாபாத்திரத்தில் நடிப்பது பற்றி ஏற்கெனவே செய்திகளும் படங்களும் வந்து, படத்துக்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.

இந்த நிலையில் படத்தின் டிரைலர் இன்று வெளியாக இருப்பதாகவும், படம் வருகிற மார்ச் 29-ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாகவும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நன்றி: பத்மா மகன், திருச்சி

Sharing is caring!