சூப்பர் ஸ்டாருடன் நடிப்பது மகிழ்ச்சி

தனது முதல் படத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிப்பதில் மகிழ்ச்சி என நடிகர் நவாசுதீன் சித்திக் தெரிவித்துள்ளார்.

காலா படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் ரஜினி நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு, அனிருத் இசையமைக்கிறார்.

ரஜினியுடன் இணைந்து நவாசுதீன் சித்திக், சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ் ஆகியோர் நடிக்கின்றனர். இந்தப் படத்தில் ஹாஸ்டல் வார்டனாக ரஜினி நடிப்பதாக கூறப்படுகிறது.

 

karthik subbaraj

@karthiksubbaraj

தமிழ் சினிமா தங்களை அன்புடன் வரவேற்கிறது ????????. Welcome to Tamil cinema sir… We too are delighted to work with you.. ????

Nawazuddin Siddiqui

@Nawazuddin_S

Rehearsing my lines for my first Tamil movie #Thalaivar165.
Delighted to be working with the Superstar #Thalaivar

இந்த படத்தின் மூலம் பிரபல பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக் தமிழுக்கு அறிமுகமாகிறார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில், “எனது முதல் தமிழ் படத்தில், சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிப்பதில் மகிழ்ச்சி. இதற்காக வசனங்களை படித்துக்கொண்டு இருக்கிறேன்” என ட்வீட் செய்துள்ளார்.

இந்த ட்வீட்டை ரீட்வீட் செய்துள்ள இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், “தமிழ் சினிமா தங்களை அன்புடன் வரவேற்கிறது” என பதிவிட்டுள்ளார்.

Sharing is caring!