சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மீதும் மீ டூ பாய்ந்திருக்கிறது

மீ டூ இயக்கம் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. அரசியல் களத்திலும், சினிமாவிலும், இசைத் துறையிலும் இருக்கும் முன்னணியினர் மீதும் மீ டூ பாய்ந்து வருகிறது. தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மீதும் மீ டூ பாய்ந்திருக்கிறது. நேரடியான பாலியல் குற்றச்சாட்டாக இல்லாவிட்டாலும், பாலிவுட்டின் முன்னணி ஹேர் ஸ்டைலிஸ்ட் ஷப்னா மோடி பவனானி, பல பெண்கள் அமிதாப் மீது பாலியில் குற்றச்சாட்டுகளை கூற தயாராக இருப்பதாக கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் எழுதியிருப்பதாவது:

நீங்கள் நடித்த பிங்க் படம் வெளியாகி உங்களுக்கு நல்ல பெயர் பெற்று தந்து இருக்கலாம். ஆனால் உங்களுடைய நல்ல பெயர் விரைவில் கெடப்போகிறது. உங்களுடைய சுயரூபம் விரைவில் வெளிச்சத்துக்கு வரும். உண்மை கண்டிப்பாக வெளியே வரத்தான் செய்யும். இப்போது நீங்கள் உங்களது கையை கடிக்க தொடங்கி இருப்பீர்கள் என்று நம்புகிறேன். அமிதாப்பச்சனின் பாலியல் தொல்லைகள் குறித்து பல பெண்கள் கூறியதை கேட்டு இருக்கிறேன். அவர்கள் வெளியே வந்து உண்மையை சொல்ல வேண்டும். இவ்வாறு சப்னா மோடி பவனானி கூறியுள்ளார்.

Sharing is caring!