சூப்பர் ஸ்ராருடன் ஜோடி சேரும் லேடி சூப்பர் ஸ்டார்

நடிகர் ரஜினி காந்தின் 167வது படத்தை இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் “தர்பார்” என பெயரிடப்பட்ட திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் 11 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினிக்கு ஜோடியாக மீண்டும் இணைகிறார் நயன்தாரா.  மேலும், அனிரூத் இசையமைக்க, சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். இத்திரைப்படத்தை, 2020ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிட லைகா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவரும், நிலையில்  இன்று முதல் (ஏப்ரல் 23) தர்பார் படப்பிடிப்பில் நயன்தாரா கலந்துகொள்கிறார் என லைகா நிறுவனம் மற்றும் ஏ.ஆர். முருகதாஸ் ஆகியோர் அவர்களது ட்விட்டரில் தெரிவித்துள்ளனர்.

Sharing is caring!