சூப்பர் ஹீரோ அவதாரம் எடுக்கிறார் நடிகர் ஜெய்

சென்னை:
சூப்பர் ஹீரோ அவதாரம் எடுக்கிறார் நடிகர் ஜெய் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘பிரேக்கிங் நியூஸ்’ படத்தில் நடிகர் ஜெய் சூப்பர் ஹீரோவாக நடிக்க இருக்கிறார்.
ஜெய் நடிப்பில் தற்போது உருவாக இருக்கும் படம் ‘பிரேக்கிங் நியூஸ்’. இப்படத்தின் பூஜை சென்னையில் உள்ள ஏவிஎம் ஸ்டூயோவில் நடைபெற்றது.

ஷங்கர் படங்களில் பணிபுரிந்த கிராபிக்ஸ் வல்லுனரான ஆண்ட்ரூ பாண்டியன் இயக்க உள்ள இந்த படத்தை ராகுல் பிலிம்ஸ் சார்பாக கே.திருக்கடல் உதயம் தயாரிக்கிறார். படத்தின் நாயகியாக தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்து பிரபலமான பானு அறிமுகமாக உள்ளார்.

இப்படத்தில் தேவ்கில், வேதாளம் வில்லன் ராகுல் தேவ், மந்திரா பேடி, இஷா கோபிகா, பழ.கருப்பையா, ராதா ரவி, கிருதுவாரகீஷ் ஆகியோர் இணைந்து நடிக்க உள்ளனர். சமூகத்தில் நடக்கும் அநீதிகள், பிரச்சனைகள், புல்வாயா குண்டு வெடிப்பு போன்ற சம்பவங்களை அடிப்படையாக கொண்டு ஒரு சாமானிய இளைஞன் சந்திக்கும் பிரச்னையை பற்றிய பேசும் படமாக இப்படம் உருவாக உள்ளது.

தமிழ் சினிமா வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவிற்கு முதல் முறையாக இப்படத்தில் புதிய தொழில் நுட்பத்துடன் 90 நிமிடங்கள் விஷூவல் எஃபெக்டில் இப்படம் உருவாக உள்ளது. இதில் ஜெய் சூப்பர் ஹீரோவாக நடிக்கிறார்.

நன்றி: பத்மா மகன், திருச்சி

Sharing is caring!