சூர்யாவின் அடுத்த படத்தின் தலைப்பு காப்பான்

சென்னை:
சூர்யாவின் அடுத்த படத்தின் தலைப்பு காப்பான்… இதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சூர்யா, மோகன் லால், ஆர்யா இணைந்து நடிக்கும் படத்தின் டைட்டிலை புத்தாண்டை முன்னிட்டு அறிவித்துள்ளது படக்குழு.
சூர்யா- கே.வி. ஆனந்த் இணைந்த முதல் படமான அயன் சூர்யாவின் சினிமா வாழ்க்கையில் முக்கியமானப் படமாக அமைந்தது மட்டுமல்லாமல், தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவிலும் சூர்யாவிற்கென ஒரு புதிய மார்க்கெட்டை உருவாக்கிக் கொடுத்தது.

லைகா தயாரிக்க இயக்குனர் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கிறார். இப்படத்தில் சூர்யாவுடன் மோகன்லால், ஆர்யா மற்றும் சாயிஷா சாகல் ஆகியோர் நடிக்கின்றனர். இந்தியப் பிரதமரின் காவல் பிரிவின் உயர்நிலை அதிகாரியாக நடிக்கும் சூர்யா, இதில் பிரதமரைக் கொலை செய்ய நடக்கும் திட்டத்தை முறியடித்து எப்படி பிரதமரைக் காக்கிறார் என்பதே கதை.

இந்த படத்தில் பிரதமராக மோகன் லால் நடிக்கிறார். இப்படத்திற்கு பெயர் வைப்பதற்கு ஒரு வித்தியாசமான முறையை அறிவித்தது படக்குழு. இயக்குனர் கே.வி. ஆனந்த். டிவிட்டரில் மீட்பான், காப்பான், உயிர்கா ஆகிய மூன்று தலைப்புகளைக் கொடுத்து, அவற்றிலிருந்து ஒன்றைத் தேர்ந்தெடுக்கச் சொல்லி கேட்டார்.

ரசிகர்கள் தேர்ந்தெடுக்கும் தலைப்பைப் படத்திற்கு வைக்க படக்குழு முடிவு செய்தது. ரசிகர்களும் ஆர்வமாக தலைப்பை தேர்ந்தெடுத்தனர்
இதையடுத்து ‘சூர்யா 37’ படத்தின் டைட்டிலை காப்பான் என படக்குழுவினர் தேர்வு செய்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!