சூர்யாவின் NGK படத்தின் முதல் பாடல் வெளியீடு

இயக்குநர் செல்வராகவன் கூட்டணியில் நடிகர் சூர்யாவின் ‘என்.ஜி.கே’ திரைப்படத்தின் முதல் பாடலின் வெளியீட்டுத் திகதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசியலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின்  டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடல் எதிர்வரும் 12ஆம் திகதி வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர் தெரிவித்துள்ளார்.

இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சில வருடங்களுக்கு முன்பு தொடங்கிய இதன் படப்பிடிப்பு பல காரணங்களால் நிறைவடைய தாமதமானது. எனினும், சூர்யாவுடன் செல்வராகவனும் முதன்முறையாக இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இத்திரைப்படம் மே மாதம் 31ஆம் திகதி வெளியாக இருப்பதாக படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!