சூர்யா நடித்துவரும் படம் ‘என்.ஜி.கே

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் படம் ‘என்.ஜி.கே.’. நந்த கோபாலன் குமரன் என்பதன் சுருக்கமாக ‘என்.ஜி.கே’ என பெயர் சூட்டப்பட்டுள்ள இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு வில்லனாக நடிக்கும் இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்தப் படத்துக்கு ரிலையன்ஸ் என்டெர்டெயின்மென்ட் நிறுவனம் நிதி உதவி செய்திருப்பதால் படத்தை வெளியிடும் உரிமையை பெற்றிருக்கிறது.

என்.ஜி.கே. தீபாவளிக்கு ரிலீஸாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது. திட்டமிட்டபடி படப்பிடிப்பு முடியாததால், ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. ‘என்.ஜி.கே.’ தீபாவளிக்கு ரிலீஸாகாவிட்டாலும், அப்படத்தின் அப்டேட் என்ன என்று அப்படத்தின் தயாரிப்பாளரான எஸ்.ஆர்.பிரபுவிடம் டுவிட்டரில் ‘என்.ஜி.கே.’ குறித்து கேள்விகளை எழுப்பினர் சூர்யா ரசிகர்கள்.

ஆனால் தயாரிப்பாளர் பிரபுவோ, இயக்குநர் செல்வராகவனோ அதைப்பற்றி வாய் திறக்க மறுக்கின்றனர். இதனால் ரசிகர்கள் கோபத்துடன் சமூக வலைதளங்களில் தங்களின் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஏற்கனவே செல்வராகவனுக்கும், தயாரிப்பாளருக்கும் பிரச்சனை, அதனால் ‘என்.ஜி.கே.’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடங்கிக்கிடப்பதாக தகவல் அடிபடுகிறது.

Sharing is caring!