சூர்யா படத்தின் சண்டைக்காட்சி அதிரடிக்கும்… அதிரடிக்கும்!

சென்னை:
என்ஜிகே படத்தில் வரும் மார்க்கெட் சண்டை செம மாஸ் ஆக இருக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் என்ஜிகே. ட்ரீம் வாரியர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்து வருகிறார்.
நீண்ட நாட்களாக படப்பிடிப்பில் இருக்கும் இந்த படம் தீபாவளிக்கே வெளியாக வேண்டியது. ஆனால் பாடல்கள் சரியாக வராததால் மறுபடியும் இசை வேலை நடந்து வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் பயங்கரமான மார்க்கெட் சண்டைக்காட்சி ஒன்று உள்ளதாம். 50 பேருடன் சூர்யா சண்டை போடும் இந்த காட்சி சில நிமிடங்களிலேயே முடிந்து விடுமாம். அந்த அளவிற்கு காட்சியில் வேகம் இருக்கும் என்று அந்த காட்சியில் நடித்தவர்கள் கூறியுள்ளனர்.

அது மட்டுமில்லாமல் படத்தில் வாட்டர் சண்டைக்காட்சி ஒன்றும் உள்ளதாம். அதுவும் இதே அளவுக்கு வெறித்தனமாக இருக்குமாம். அதனால் இந்த படம் ரசிகர்களுக்கு செம விருந்தாக இருக்கும் என்று தகவல் தெரிவிக்கின்றன.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!