சூர்யா படத்தின் வெற்றி கொண்டாட்டங்கள்

உறியடி படத்தின் இரண்டாம் பாகத்தை, விஜய்குமாரே இயக்கி, நாயகனாகவும் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக, கேரளாவைச் சேர்ந்த விஸ்மயா நடித்துள்ளார்.

விஜய் சேதுபதியின் `96’ படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும் இந்தப் படத்தை, சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

சமீபத்தில் திரைக்கு வந்த இந்த திரைப்படம், பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை பெற்றது. அதனை முன்னிட்டு, உறியடி 2 படக்குழுவினர் படத்தின் வெற்றியை கொண்டாடியுள்ளனர்.

Sharing is caring!