சூர்யா படத்தில் பாடல் பாடியுள்ள செந்தில்- ராஜலட்சுமி ஜோடி

சென்னை:
சூர்யா படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளனர் செந்தில் – ராஜ லட்சுமி ஜோடி.

சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகும் புதிய படத்தில் பிரபல பின்னணி பாடகர்கள் செந்தில் – ராஜலட்சுமி ஒரு பாடலை பாடியிருக்கிறார்கள். செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள `என்ஜிகே’ படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது.

‘இறுதிச்சுற்று’ பட இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் சூர்யா. இப்படத்தை 2டி எண்டர்டய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. சூர்யாவின் 38-வது படமாக உருவாகும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

சாதாரண மனிதர்களும் விமானப் போக்குவரத்தை பயன்படுத்தும் நோக்கில் பட்ஜெட் விமானச் சேவையை அறிமுகப்படுத்திய ‘ஏர் டெக்கான்’ நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட உள்ளது.

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி வாயிலாக பிரபலமடைந்த செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி இப்படத்திற்காக ஒரு பாடலை பாடியுள்ளனர்.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!