சூர்யா 38…கதை எதுபற்றி தெரியுமா?

என்ஜிகே திரைப்படத்திற்கு பிறகு இறுதிச்சுற்று படத்தின் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் புதிய திரைப்படம், தொழிலதிபர் குறித்த படமாக இருக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே படத்தில் நடித்து முடித்திருக்கும் நடிகர் சூர்யா, தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சூர்யாவுடன் மோகன்லால், ஆர்யா உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர்.

இப்படம் அக்டோபர் மாதத்தில் திரைக்கு வரவுள்ள நிலையில், இறுதிச்சுற்று பட இயக்குநர் சுதா கொங்கரா இயக்கும் புதிய படத்தில் சூர்யா நடிக்கிறார். இதற்கான பிரீ-ப்ரோடக்‌ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த திரைப்படம் தொழிலதிபர் ஒருவரின் கதையை மையமாக வைத்து உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படத்திற்கான பிஜிஎம் வேலைகளை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கிட்டத்தட்ட முடித்து விட்டதாக கூறப்படுகிறது.

Sharing is caring!