செக்கச்சிவந்த வானம் நடித்த மலையாள நடிகர் அப்பாணி சரத் ரொம்பவே வருத்தத்தில்

மல்டி ஸ்டாரர் படமாக வெளியாகியுள்ள செக்க சிவந்த வானம் படம் படத்தில் நடித்த நான்கு ஹீரோக்களுக்கும், அவ்வளவு ஏன் பிரகாஷ்ராஜுவுக்கும் கூட சம முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இதில் நடித்த மலையாள நடிகர் அப்பாணி சரத் ரொம்பவே வருத்தத்தில் இருகிறாராம்..

மலையாளத்தில் அங்கமாலி டைரீஸ் படத்தில் அப்பாணி ரவி என்கிற கேரக்டரில் கவனிக்கத்தக்க வகையில் நடிப்பை வெளிப்படுத்தி அறிமுகமானவர் அப்பாணி சரத் என்கிற சரத்குமார். அடுத்து மோகன்லாலுடன் நடித்தவருக்கு தமிழில் மணிரத்னத்திடம் இருந்து அழைப்பு வரவே ஓடோடி வந்து நடித்துக் கொடுத்தார்.

படத்தில் தாதா தியாகராஜனின் மருமகனாக வருவாரே அவர் தான் அப்பாணி சரத். தமிழில் தனது முதல் படம் என்பதால் மிகவும் எதிர்பார்ப்புடன் இருந்தாராம். ஆனால் கண்மூடி கண் திறப்பதற்குள் நகர்ந்துவிடும் வெறும் இரண்டே காட்சிகளில் மட்டுமே இடம் பெற்றிருப்பதால் இவருக்கு ரொம்பவே வருத்தமாம். அடுத்ததாக விஷாலின் சண்டக்கோழி-2 வைத்தான் பெரிதும் நம்பியிருக்கிறார் மனிதர்.

Sharing is caring!