‘செக்கச்சிவந்த வானம்’ படத்தின் வௌியீட்டுத் திகதியில் மாற்றம்

மணிரத்னம் இயக்கத்தில் நட்சத்திரப் பட்டாளங்கள் பலரது நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வௌியாக இருக்கும் ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தின் வௌியீட்டுத் திகதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் படம் ‘செக்கச்சிவந்த வானம்’.

மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் அரவிந்த் சாமி, அருண் விஜய், சிம்பு, விஜய் சேதுபதி, ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ் ராஜ், தியாகராஜன் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.

படப்பிடிப்பு முடிந்து புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படம் செப்டம்பர் 27 ஆம் திகதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

படம் செப்டம்பர் 28 ஆம் திகதி வௌியாக இருப்பதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், படம் ஒரு நாள் முன்னதாக வௌியாவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

Sharing is caring!