‘செக்க சிவந்த வானம்’ படம் இன்று வெளியாகியுள்ளது. கேரளாவில் 112 தியேட்டர்களில்

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘செக்க சிவந்த வானம்’ படம் இன்று வெளியாகியுள்ளது. அரவிந்த்சாமி, விஜய்சேதுபதி, அருண்விஜய், சிம்பு, ஜோதிகா என மிகப்பெரிய நட்சத்திர கூட்டமே இந்தப்படத்தில் நடித்துள்ளதால் இந்தப்படத்திற்கு கேரளாவிலும் மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கிறது. குறிப்பாக சிம்பு ரசிகர்கள் கடந்த இரண்டு வார காலமாகவே புரமோஷன்களில் கலக்கி வருகின்றனர்.

இன்று சுமார் 112 தியேட்டர்களில் இந்தப்படம் திரையிடப்பட்டுள்ளது. வெல் பார்ன் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்தப்படத்தை கேரளாவில் ரிலீஸ் செய்துள்ளது. ஏற்கனவே மலையாளத்தில் வெளியான தீவண்டி மற்றும் வரதன் படங்கள் ஹிட்டாக ஓடிக்கொண்டு இருப்பதால் இந்தப்படத்திற்கும் இன்னும் அதிகமாக தியேட்டர்கள் ஒதுக்க முடியாமல் போனதாம்.

Sharing is caring!