செட் பணிகள் முடியலை… அடுத்த மாதம் தான் இந்தியன் 2 படப்பிடிப்பு ஸ்டார்ட்

சென்னை:
அடுத்த மாதம்தான் இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க இருக்கும் படம் இந்தியன் 2. 2.0 படம் ரிலீஸ்க்கு முன்பே படத்திற்கான ஷூட்டிங் பகுதிகளை தேர்வு செய்யும் பணிகளில் இயக்குனர் ஷங்கர் இறங்கினார்.

பின் இப்படத்தின் காட்சிகளுக்காக செட் அமைக்கும் பணிகள் தொடங்கியது. துரிதமாக நடைபெற்று வரும் இந்த வேலைகள் ஆர்ட் வேலைகள் காரணமாக இன்னும் கூடுதல் நாட்கள் தேவைப்படுகிறதாம்.

இதனால் இம்மாதம் தொடங்க இருந்த படப்பிடிப்பை அடுத்த மாதத்திற்கு (2019 ஜனவரி) தள்ளி வைத்துள்ளனர். இப்படத்தில் நடிக்கவுள்ள காஜல் அகர்வால் படத்திற்காக களரி பயற்சிகளை எடுத்து வருகிறாராம்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!