செந்தில் கணேஷ், ஹீரோவாக நடிக்கிறார்

விஜய் டிவியில் ஒளிப்பரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பிரபலமானவர்கள் நாட்புற பாடகர்களான செந்தில் கணேஷ் – ராஜலஷ்மி தம்பதியினர். இவர்கள் பாடிய சின்ன மச்சான், செவத்த மச்சான் பாடல் மிகவும் பிரபலம்.

இந்தப்பாடல் பிரபுதேவா நடித்து வரும் சார்லி சாப்ளின் 2 படத்தில் பாடலாகி இருக்கிறது. இவர்களே பாடி உள்ளனர். சமீபத்தில் யு-டியூப்பில் வெளியிடப்பட்ட இந்த பாடலுக்கு 1.30 லட்சம் பார்வைகள் கிடைத்துள்ளன.
இந்நிலையில் செந்தில் கணேஷ், ஹீரோவாக நடிக்கிறார். கரிமுகன் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் காயத்ரி என்ற கேரளா பெண் கதாநாயகியாக நடிக்கிறார். பாடல்கள் எழுதி, இசையமைத்து, இயக்குகிறார் செல்ல தங்கையா.
படம் பற்றி தங்கையா கூறுகையில், நான், செந்தில் கணேஷ், ராஜலட்சுமி மற்றும் எங்கள் குழுவினர் நாட்டுப்புற பாடல்கள் பாடி நிகழ்ச்சி நடத்தி வருகிறோம். செந்தில் கணேஷை நாயகனாக்கி திருடு போகாத மனசு என்ற படத்தை இயக்கி வெளியிட்டேன். அதற்கு பிறகு மீண்டும் அவரை வைத்து கரிமுகன் படத்தை இயக்கி வருகிறேன்.
முகம் தெரியாத இரண்டு பேருக்குள் நடக்கிற பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து, அந்த பிரச்னையிலிருந்து அவர்கள் வெளியே வந்தார்கள் என்பதை காமெடியாக சொல்லும் படம். செந்தில் கணேஷ் எலக்ட்ரீஷியனாக நடிக்கிறார். புதுக்கோட்டை, கோட்டைபட்டினம், தேவிபட்டினம் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது என்கிறார்.

Sharing is caring!