சென்ட்ராயனுக்கு பரிசு கொடுத்த நடிகர் சிம்பு

சென்னை:
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட சென்ட்ராயனுக்கு பரிசு கொடுத்துள்ளார் நடிகர் சிம்பு.

பிக்பாஸ் வீட்டிலிருந்து சென்ட்ராயன் சென்ற வாரம் வெளியேற்றப்பட்டதை மக்கள் ஏற்கவில்லை. மக்களின் ஓட்டு என கூறி பிக்பாஸ் ஏதோ தகிடுதத்தம் வேலை செய்திருப்பதாக  நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சென்ட்ராயனை, சிம்பு தன் வீட்டிற்கு அழைத்து வாழ்த்து கூறியுள்ளார். அதோடு ஒரு பரிசு பொருளை அவருக்கு கொடுத்துள்ளார்.

அது திருமூலரின் திருமந்திரம் என்ற புத்தகத்தை பரிசுதான். அளித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை மஹத் தனது இன்ஸ்டகிராமில்  பதிவிட்டுள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!