சென்ட்ராயனை ஏமாற்றிய ஐஸ்வர்யா… தலைமுடியை இழந்தார்

சென்னை:
ஐஸ்வர்யா போல் ஏமாற்றாமல் நேர்மையாக டாஸ்க்கில் தனக்கு கொடுக்கப்பட்டதை கூறுகிறார். தான் செய்த தப்புக்காகவும், சென்ட்ராயனுக்காகவும் தன் தலைமுடியை இழந்துவிட்டார் ஐஸ்வர்யா.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் தனக்கு வழங்கப்பட்ட டாஸ்க்கில் செண்ட்ராயனை ஏமாற்றி ஐஸ்வர்யா செய்த செயலால் செண்ட்ராயன் மீதும் ஐஸ்வர்யா மீதும் சக போட்டியாளர்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர்.

இந்நிலையில் ஐஸ்வர்யாவின் முடியை வெட்டும் டாஸ்க் சென்ட்ராயனுக்கு கொடுக்கப்படுகிறது. ஐஸ்வர்யா போல் பொய் சொல்லாமல் நேர்மையாக தனக்கு கொடுக்கப்பட்டுள்ள டாஸ்க் குறித்து சென்ட்ராயன் ஐஸ்வர்யாவிடம் கூற, முதல் நாள் தன் செயலால் குற்ற உணர்ச்சிக்கு ஆளான ஐஸ்வர்யா அதற்கு பரிகாரமாக தன்னுடைய தலைமுடியை தியாகம் செய்ய ஒப்புக்கொள்கிறார்.

அதன்படி ஐஸ்வர்யாவின் தலைமுடி ஒரு குறிப்பிட்ட அளவு வெட்டப்பட்டது. இந்நிலையில் ஐஸ்வர்யாவை செமத்தியாக ஏற்றிவிடும் வகையில் ‘என்னுடைய தலைமுடி ஒரு இன்ச் வெட்டப்பட்டால் கூட என் உயிரே போய்விடும் என்று மும்தாஜ் கூற சக போட்டியாளர்கள் அவரை வெறுப்புடன் பார்த்தனர்.

ஐஸ்வர்யாவை விட சதி செய்வதில் வல்லவராக இருக்கும் மும்தாஜையும் விரைவில் மக்கள் வெளியேற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!