சென்னையில் ஆரம்பம் ஆகுது விஜய்யின் அடுத்த பட ஷூட்டிங்

சென்னை:
விஜய்யின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடக்க உள்ளது என்று விபரமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நடிகர் விஜய்யின் அடுத்த படத்தை அட்லீ இயக்கவுள்ளார். படத்தின் பூஜை ஏற்கனவே நடந்து முடிந்துவிட்டது. இயக்குனர் அட்லீ லொகேஷன் பார்க்கும் பணியில் செம மும்முரமாக இருந்து வந்தார்.

இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் ஹீரோயினாக நயன்தாரா தேர்வாகியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்து ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இந்நிலையில் முதற்கட்ட ஷூட்டிங் பற்றிய விவரமும் வெளியாகியுள்ளது.

முதற்கட்ட ஷூட்டிங் சென்னையில் தான் துவங்குமாம். அதற்காக சென்னை ஓஎம்ஆர் சாலையில் லொகேஷன் பார்த்து வைத்துள்ளாராம் அட்லீ.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!