சென்னையில் சர்கார் முதல்நாள் வசூலை முறியடித்த 2.0 படம்

சென்னை:
சர்கார் முதல் நாள் வசூலை முறியடித்துள்ளது ரஜினியின் 2.0 படம்.

விஜய் நடிப்பில் கடந்த தீபாவளிக்கு சர்கார் படம் பல சர்ச்சைகளுக்கு நடுவில் வெளியானது. பாசிட்டிவ் விமர்சனங்களுக்கிடையில் நல்ல வசூல் செய்து சாதனை செய்தது. பாக்ஸ் ஆபிஸில் ரூ.250 கோடிகளை தாண்டி சாதனை செய்தது.

இணையதளத்தில் சாதனைகளை செய்த இப்படம் மெர்சல் படத்தின் சாதனைகளை முந்தியது. இந்நிலையில் ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார் நடித்துள்ள 2.0 படம் வெளியாகியுள்ளது.

தற்போது சென்னையில் ரூ 2.64 கோடியை அள்ளி சர்கார் படத்தின் ஒரு நாள் வசூலை முந்தியுள்ளது. மேலும் சென்னை பாக்ஸ் ஆபீசில் ஆல் டைம் ரெக்கார்டு என்ற சிறப்பையும் பெற்றுள்ளது. இதனால் ரஜினி ரசிகர்கள் குஷியில் இருக்கிறார்கள்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!