சென்னையில் தளபதி 63

விஜய் அட்லி கூட்டணியில் உருவாகும் விஜய் 63 படத்திற்கான படபிடிப்பு சென்னையில் நடக்க உள்ளது.

மெர்சலுக்குப் பிறகு அட்லி இயக்கும் புதிய படத்திலும் ஹீரோவாக விஜய்யே நடிக்க இருக்கிறார். விஜய்யின் 63-வது படமான இதனை ‘AGS எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் தயாரிக்கிறது
தற்போது வந்துள்ள தகவலின்படி, இந்தத் திரைப்படத்தின் படபிடிப்பு, வரும் 2010 ஜனவரியில் துவங்க இருக்கிறதாம். அதோடு அட்லீ – விஜய் காம்போவில் வெளியான முந்தைய படங்களில் இடம்பெற்ற ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு, கலை இயக்குநர் முத்துராஜ், எடிட்டர் ரூபன் ஆகியோர் இந்தப் படத்திலும் இணைந்து வேலை செய்கிறார்களாம். இதனை அதிகாரப் பூர்வமாக தீபாவளிக்குப் பிறகு அறிவிக்க இருக்கிறார்களாம் படக்குழுவினர்.

மேலும் படத்தில் விஜய் பயிற்சியாளராக நடிக்க 16 பெண்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்நிலையில் தள‌பதி 63 படத்திற்கான படப்பிடிப்பு சென்னையில் உள்ள எஸ்.ஆர்.எம் கல்லூரியில் நடப்பதாக கூறப்படுகிறது.

Sharing is caring!