சென்னையில் நேற்று மட்டும் ரூ. 1.32 கோடி வசூலித்த 2.0 படம்

சென்னை:
சென்னையில் நேற்று 10ம் நாளில் மட்டும் ரஜினியின் 2.0 படம் ரூ.1.32 கோடி வசூலித்துள்ளது.

2.0 படம் ரிலீஸ் ஆன முதல் நாள் முதலே நல்ல வசூல் ஈட்டி வருகிறது. தற்போது 10 நாட்கள் முடிந்துள்ள நிலையிலும் தொடர்ந்த நல்ல வசூலை 2.0 உலகம் முழுவதும் பெற்று வருகிறது.

அடுத்த வருடம் இடையில் 2.0 படம் சீனாவில் மிக பிரமாண்டமாக வெளிவரவுள்ளது. அப்போது பல சாதனைகளை அது முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது 10வது நாள் சென்னை வசூல் விவரங்கள் வெளிவந்துள்ளது. சென்னையில் மட்டும் 2.0 1.32 கோடி நேற்று வசூலித்துள்ளது. இதுவரை மொத்தம் சென்னையில் மட்டும் 16.89 கோடி ருபாய் வசூல் கிடைத்துள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!