சென்னையில் மட்டும் சர்கார் படம் ரூ. 13.02 கோடி வசூல்

சென்னை:
சென்னையில் மட்டும் சர்கார் படம் ரூ. 13.02 கோடி வசூல் வேட்டை ஆடியுள்ளது என்று விபரமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விஜய்யின் சர்கார் தான் தமிழில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம். தீபாவளிக்கு வந்த இந்த படம் தாறுமாறாக ஓடிக் கொண்டிருக்கிறது.

எல்லா இடத்திலும் படத்திற்கு நல்ல வரவேற்பு தான், சென்னையில் இப்படத்தை வாங்கிய அபிராமி ராமநாதன் போட்ட பணம் வந்துவிட்டது இனி வருவது எல்லாம் லாபம் தான் என கூறியிருந்தார்.

அதேபோல் சென்னையில் படத்திற்கு இப்போதும் திரையரங்குகளில் கூட்டம் அதிகம் தான். படம் வெளியாகி 12வது நாள் படம் இங்கு ரூ. 52 லட்சம் வசூலித்துள்ளது. மொத்தமாக சென்னையில் இப்போது வரை ரூ. 13.02 கோடி வசூல் என கூறப்படுகிறது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!