செம மாஸ் காட்டியுள்ளது ரவுடி பேபி… 78 மில்லியன் ஹிட்ஸை கடந்தது

சென்னை:
தனுஷ் நடிப்பில் வெளியான மாரி-2 படத்தின் ரவுடி பேபி பாடல், 78 மில்லியன் ஹிட்ஸை கடந்து செம சாதனை செய்துள்ளது.

தனுஷ் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம். மாஸ், க்ளாஸ் என இரண்டு வகை படங்களையும் தேர்ந்தெடுத்து நடிப்பவர். இவர் நடிப்பில் கடைசியாக மாரி-2 படம் திரைக்கு வந்தது, இப்படம் ரசிகர்களிடம் பெரியளவில் வரவேற்பு இல்லை என்றாலும், நஷ்டம் பெரிதாக இல்லை என்று தான் கூறுகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தின் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் தற்போது உலகளவில் புகழ் பெற்றுள்ளது. ரவுடி பேபி 78 மில்லியன் ஹிட்ஸை கடந்து வெளிநாட்டு தளம் ஒன்றில் 4வது இடத்தை பிடித்துள்ளது,

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!