செம மாஸ் வரவேற்பு பெற்றுள்ள பேட்ட படத்தின் மரண மாஸ் பாடல்

சென்னை:
10 நாட்களில் 25 மில்லியன் Streams பெற்றுள்ளதாம் ரஜினியின் பேட்ட படத்தின் மரண மாஸ் பாடல்.

பொங்கல் போட்டியில் வரும் புதுவருடம் 2019 ல் ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட படமும் இணைகிறது. விஸ்வாசம் படம் முன்பே பொங்கல் ரிலீஸ் என அறிவித்துவிட்ட நிலையில் இந்த போட்டி ரசிகர்களுக்கு ஷாக் தான்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார், ஏற்கனவே அனிருத் இசையில் இப்படத்தின் மரண மாஸ் பாடல் மொத்த ரசிகர்களை குத்தாட்டம் போட வைத்தது.

பின் அடுத்தடுத்து மற்ற பாடல்கள் இணையதளத்தில் வெளியானது. இந்நிலையில் இப்பாடல்கள் 10 நாட்களில் 25 மில்லியன் Streams பெற்றுள்ளதாம். இந்த மகிழ்ச்சியை அனிருத்தும் பகிர்ந்துள்ளார். இதனால் ரசிகர்கள் செம உற்சாகத்தில் உள்ளனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!