செம மாஸ் விற்பனை… ரஜினியின் பேட்ட படம் செம மாஸ் விற்பனை

சென்னை:
செம மாஸ் விற்பனை… ரஜினியின் பேட்ட படத்தின் விற்பனை மாஸ் காட்டி வருகிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

ரஜினியின் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாக உள்ள பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழாவை சில வாரங்களுக்கு முன்பு பிரமாண்டமாக நடத்தப்பட்டது. இந்த படத்தை தயாரித்துள்ள சன்பிக்சர்ஸ் நிறுவனம், உலகம் முழுவதும் திரையரங்கு உரிமையை மட்டுமே 124 கோடிகளில் வியாபாரத்தை நடத்தி முடித்துள்ளது.

சென்னை, வட ஆற்காடு, தென் ஆற்காடு பகுதி உரிமைகளை ரெட் ஜெயண்ட்ஸ் வாங்கிவிட்ட போதிலும் ஓவர் ஆல் தமிழக உரிமை ரூ.55 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாம்.

தெலுங்கில் ரூ.13 கோடி, கர்நாடகாவில் ரூ.11.25 கோடி, கேரளாவில் தோராயமாக ரூ.6 கோடி மற்றும் இந்தியாவின் இதர பகுதிகளில் ரூ.5 கோடிக்கும் விற்பனையாகியுள்ளதாம்.

அமெரிக்காவில் 300+ திரையரங்குகளில் ரூ.9 கோடி உள்பட இந்தியாவை தாண்டி இப்படம் ரூ.34 கோடி விற்பனையாகியுள்ளதாம்

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!