செம வசூல்… செக்கச்சிவந்த வானம் படம் வசூல் வேட்டை

சென்னை:
அதிரடியாக வசூல் வேட்டை நடத்தி வருகிறது மணிரத்னத்தின் செக்கச் சிவந்த வானம் படம்.

செக்கச்சிவந்த வானம் இது உண்மையாகவே மணிரத்னம் படம் தானா என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது. காரணம் படமாகவும் சரி, அதற்கு வந்த வசூலும் வேற லெவலில் உள்ளது.

இந்த படம் வெளிவந்து 6 நாட்கள் ஆகிய நிலையில் உலகம் முழுவதும் சுமார் 70 கோடி ரூபாய் வரை வசூல் வந்துள்ளது என கூறப்படுகிறது. தமிழகத்தில் மட்டுமே வசூல் ரூ.35 கோடி வசூல் வேட்டை ஆடிஉள்ளது. ஓவர்சீஸில் இப்படம் ரூ.25 கோடி வசூல் வந்துள்ளதாக கூறப்படுகின்றது.

எப்படி பார்த்தாலும் இந்த வருடத்தில் கடைக்குட்டி சிங்கத்திற்கு பிறகு அனைத்து தரப்பினருக்கும் மிகப்பெரும் லாபம் தந்த படமாக இது அமைந்துள்ளது. மணிரத்னத்திற்கும் கம் டூ பேக் ஆகவும் அவருக்கு இளமை திரும்பி விட்டது என்றும் கூறலாம்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!