செம வசூல் வேட்டை… முதல் நாளிலேயே ரூ. 5 கோடி வசூல் செய்த நிவின் பாலி படம்

சென்னை:
செம ஹிட் கொடுத்து வசூல் வேட்டையில் முதலிடம் பிடித்துள்ளது நிவின்பாலியின் படம்.

பிரேமம் படம் மூலம் தமிழ் சினிமாவில் மொத்த ரசிகர்களையும் ஈர்த்தவர் நிவின் பாலி. மலையாள சினிமாவில் அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.

அவரின் நடிப்பில் தற்போது காயங்குளம் கொச்சினி படம் வெளியாகியுள்ளது. கேரளாவில் 350 க்கும் அதிகமான தியேட்டர்களில் இப்படம் வெளியாகியுள்ளதாம். அதிகமான எண்ணிக்கையில் ரிலீஸ் ஆகியுள்ளது.

பாக்ஸ் ஆபிஸில் இப்படம் முதல் நாளே கேரளாவில் மட்டும் ரூ 5.30 கோடியை வசூலித்துள்ளது. மேலும் இப்படம் மிகப்பெரிய முதல்நாள் வசூல் என்ற சிறப்பையும் பெற்றுள்ளது. நிவின் பாலியின் படங்களில் மிக முக்கியமானதாக மாறியுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!