செம ஸ்லிம் அஜித்… இணையத்தை கலக்குது படம்

சென்னை:
செம ஸ்லிம்… ஸ்லிம்… அஜித் உடலை குறைத்து செம ஸ்லிம் ஆக இருக்கும் படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

விஸ்வாசம் படத்திற்கு அடுத்ததாக தீரன் பட இயக்குனர் எச்.வினோத்தின் இயக்கத்தில் நடித்து வருகிறார் அஜித். இதன் படப்பிடிப்பு இடையே சினிமா பிரபலங்களை சந்தித்தும் வருகிறார். சமீபத்தில் இயக்குனர் பிரியதர்ஷன் போன்றோரை கேரளாவில் சந்தித்திருந்தார்.

இந்நிலையில் அவரது லேட்டஸ்ட் போட்டோ ஒன்று சமூக வலைத்தளங்களில் செம வைரலாகி வருகிறது. காரணம், ரசிகர்களுடன் எடுக்கப்பட்ட அந்த போட்டோவில் வெள்ளை சட்டை, காக்கி பேண்ட்டுடன் அஜித் முன்பை விட ஸ்லிமாக காட்சியளிக்கிறார். இதனால் ரசிகர்கள் செம்ம குஷியாகியுள்ளனர். இப்படி தான் பிங்க் ரீமேக் முழுவதும் நடிக்கவுள்ளாரா என்று தெரியவில்லை.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!