செல்ஃபிக்கு ஆதரவு தெரிவிக்கும் சூர்யா

சூர்யாவின்  தந்தை சிவகுமார் மற்றும் தம்பி கார்த்திக் செல்ஃபிக்கு எதிராக தங்கள‌து கருத்துக்களையும் , செயல்களையும்  பதிவு செய்து வரும் நிலையில் சூர்யா, விஜயின்  பெற்றோருடன் செல்ஃபி எடுத்திருப்பது  கோலிவுட் வட்டாரங்களிடம் குழப்பத்தை எற்படுத்தி இருக்கிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர்  ஜூலை காற்றிலே படத்திற்கான பாடல் வெளியீட்டு விழாவில் நடிகர் கார்த்திக் பேசும்போது, “செல்ஃபிக்கு மரியாதையே இல்லாமல் போய்விட்டது. கேட்டுவிட்டு புகைப்படம் எடுப்பது என்றில்லை. முகத்துக்கு முன்னால் கேமராவை கொண்டு வந்து வைக்கிறார்கள். அதிலும் பின்னால் ஒரு பிளாஷ், முன்னால் ஒரு பிளாஷ்.அது கண்ணில் பட்டால் என்ன ஆகும்? இப்படி இங்கு சொன்னால் தான் உண்டு. வேறு எங்கும் இதனை சொல்ல முடியாது” என்றார் கோபமாக. இந்த நிகழ்வு கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சூர்யாவின் தந்தையான சிவகுமார் செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகரின் கைபேசியை தட்டிவிட்டுள்ளார்.

இந்நிலையில் நடிகர் சூர்யா விஜயின் பெற்றொருடன் செல்ஃபி எடுத்திருக்கிறார். இவ்வாறான நடவடிக்கை, செல்ஃபிக்கு சூர்யா ஆதரவா? என்கிற கேள்வி எழுகிறது.

Sharing is caring!