சொல்லிசை பாடகர் MHD, சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த காணொளியால் சர்ச்சை

சொல்லிசை பாடகர் MHD, கடந்த வியாழக்கிழமை இரவு ஒரு காணொளி ஒன்றை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார். இதனால் பெரும் சர்ச்சைகள் எழுந்துள்ளன.

பாடகர் MHD இன் சகோதரன் காவல்துறையினரால் தாக்கப்பட்டு கைது செய்யப்படுவது காணொளியில் பதிவாகியுள்ளது. பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் உள்ள MHD இன் வீட்டுக்கு கீழே வைத்து இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது. காணொளி இதுவரை பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டகிராம் என மொத்தமாக 1.3 மில்லியன் மக்களால் பார்வையிடப்பட்டுள்ளது. ‘இன்று எனது சகோதரன் காவல்துறையினரின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளான். இளம் நபர்களை காவல்துறையினர் இப்படித்தான் நடத்துகின்றனர். இதை அதிகமாக பகிருங்கள். இதுபோல் இனி இடம்பெறாமல் தடுக்கவேண்டும்!’ என அவர் குறிப்பிட்டிருந்தார்.

அதைத் தொடர்ந்து, பரிஸ் அரச வழக்கறிஞர் அலுவலகம் இந்த விசாரணைகளை காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளது. பரிஸ் IGPN படையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Sharing is caring!