சோதனை….கண் சிமிட்டல் அழகி பிரியா வாரியருக்குதான்…..

ஒரு அடார் லவ் படத்தில் வரும் பாடலில் கண்ணடித்து ஒரே நாளில் நாடு முழுவதும் பிரபலமானார் ப்ரியா பிரகாஷ் வாரியர். அந்த கண்ணடித்த காட்சி பிரபலமானதால் கதையை மாற்றி எழுதி ப்ரியாவை ஹீரோயினாக போட்டு படத்தை வெளியிட்டனர்.

ஆனால் படம் எதிர்பார்த்தபடி ஓடவில்லை. படத்தை பார்த்தவர்களும் ப்ரியாவின் நடிப்பை கிண்டல் தான் செய்தார்கள். இது குறித்து படத்தின் இயக்குநர் உமர் லுலுவும், ப்ரியாவை ஹீரோயினாக போட விருப்பமில்லை. தயாரிப்பு தரப்பு கட்டாயப்படுத்தியதால் அவரை ஹீரோயின் ஆக்கினேன். ப்ரியாவை விட நூரின் ஷரீஃப் தான் நல்ல நடிகை. நான் ப்ரியாவுடன் டச்சில் இல்லை என்றார் என ப்ரியா மீது குற்றஞ்சாட்டியிருந்தார்.

உமர் லுலுவின் பேட்டியை பார்த்த ப்ரியா நான் வாயை திறந்தால் பல விஷயம் வெளியே வரும் என்று சமூக வலைதளத்தில் தெரிவித்து அதை நீக்கிவிட்டார். ஒரு அடார் லவ் படத்திற்கு பிறகு மலையாள திரையுலகில் யாரும் ப்ரியாவை அணுகி வாய்ப்பு கொடுக்கவில்லை.

பாலிவுட் பக்கம் சென்றவருக்கும் ஸ்ரீதேவி பங்களா என்ற ஒற்றை படம் மட்டுமே உள்ளது. இப்படத்தையும் திரையிட விட மாட்டேன் என்று ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் பிடிவாதமாக உள்ளார். இதனால் வந்த வேகத்திலேயே சினிமாவை விட்டு ஒதுங்கும் நிலை ப்ரியாவிற்கு ஏற்பட்டுள்ளது.

Sharing is caring!