ஜகமே தந்திரம் திரைப்பத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் காதலர் தினத்தையொட்டி வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜகமே தந்திரம் திரைப்படத்தில் தனுஷுற்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சஞ்சனா நடராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். அத்துடன் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி இரசிகர்களின் மனதை கவர்ந்துள்ள நிலையில் படத்தின் வெளியீடு குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!