ஜாதியை ஒழிக்கவே நான் அரசியலுக்கு வருவேன்..!! வில்லன் நடிகர்

விருமாண்டி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் சாய் தீனா. அதன் பிறகு ஆரண்ய காண்டம், எந்திரன், வாலு, தெறி, திமிருபுடிச்சவன், வட சென்னை என்று பல படங்களில் வில்லன் கதாப்பாத்திரத்தில் சிறப்பாக நடித்திருப்பார் சாய் தீனா. அண்மையில் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்திலும் நடித்திருந்தார்.

இந்நிலையில், உலகமே கொரோனா பிரச்சினையால், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்கள். இதனால் ஏழை எளிய மக்கள் உணவின்றி தவித்த நிலையில் தன்னால் முயன்ற உதவியை நடிகர் சாய் தீனா செய்து வருகிறார்.

தற்போது, நேர்காணலில் பேசிய சாய் தீனா, அண்மையில் விஜய், விஜய் சேதுபதி, ஜோதிகா பேசிய கருத்துகளுக்கு பதிலளித்துள்ளார். அதில் நல்லது செய்யும் கூட்டம் தனித்தனியாக இருக்கிறார்கள். கெட்டது பற்றி மட்டுமே பேசும் கூட்டம் ஒன்றாகவே இருக்கிறார்கள் என காட்டமாக பதிலளித்துள்ளார்.

மேலும், ஜாதிச் சண்டை பேசுவதனால் தான் ஒன்றாக இருக்கிறார்கள். அனைத்து நடிகர்களும் ஒன்றாக இணைவோம். ஜாதியை ஒழிப்போம் இறங்கி வாங்க ஒன்று சேருவோம் என பேசியுள்ளார்.

அதன் பின்னர், நிறைய மக்களிடம் ஜாதி அடையாளம் எப்பொழுதும் இருக்கிறது. ஆனால் அரசியல் புரிதல் இல்லை என்ன தேவை என்பது தெரியவில்லை.

அதனால், தான் அரசியல்வாதிகளிடம் எப்பொழுது தோற்றக்கப்பட்டுகொண்டே இருக்கிறார்கள். அரசியவல்வாதிகளும் ஏமாற்றிகொண்டே இருக்கிறார்கள்.

நிறைய பேர் நான் தமிழன், தமிழன் என்று பேசி கொள்கிறார்கள் ஆனால், தமிழனை வெளிநாட்டில இருக்கிறவனா? வந்து கொல்லுறான்?.. தமிழனை தமிழன் தான் கொல்லுறான்…

ஈழத் தமிழரை கொன்றால் துடிக்கிறார்கள். ஆனால் இங்கிருக்கும் தமிழன் தமிழனையே கொல்றான். இந்த மனநிலை மாற வேண்டும். மக்கள் ஒன்றிணைந்து செயல்பட்டு ஜாதியை ஒழிக்க வேண்டும்.

ஜாதியை ஒழிக்கவே நான் அரசியலுக்கு வருவேன். எவன் பின்னாடியும் நிற்கமாட்டேன் என சாய் தீனா அதிரடியாக பேசியுள்ளார்…

Sharing is caring!