ஜானி டிரைலர் வெளியாகி உள்ளது

சாஹசம் படத்திற்கு பிறகு பிரஷாசந்த் நடிப்பில் வெளியாக உள்ள படம் ஜானி. பிரஷாந்த், சஞ்சிதா ஷெட்டி, பிரபு, ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை வெற்றி செல்வன் இயக்கி உள்ளார். பிரஷாந்த்தின் அப்பா தியாகராஜன் தயாரித்துள்ளார்.

ஆக்சன் படமாக உருவாகி உள்ள ஜானி படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகள் கிடைத்துள்ள நிலையில், தற்போது டிரைலர் வெளியாகி உள்ளது. கள்ளநோட்டை மையமாக வைத்து ஆக்சன் படமாக ஜானி உருவாகி இருப்பது டிரைலரை பார்க்கும்போதே தெரிகிறது. ரிலீஸ்க்கான வேலைகள் நடந்து வருகின்றன.

Sharing is caring!