ஜான்வி கபூரின் முதல் படம்… செம வசூல்… நல்ல வரவேற்பு

மும்பை:
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடித்துள்ள முதல்படத்திற்கு செம வரவேற்பு கிடைத்துள்ளது.

சாஷன்க் இயக்கத்தில் ஜான்வி கபூர்-இஷான் நடிகர்களாக அறிமுகமாகி இருக்கும் படம் தடக். நேற்று வெளியான மராத்தி படத்தின் ரீமேக்கான இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்துள்ளது.

ஆனால் அறிமுக இளம் நடிகர்களான இவர்களின் நடிப்புக்கு பிரபலங்களை தாண்டி மக்களிடமும் செம ரெஸ்பான்ஸ். திரையரங்குகளில் அதிக புக்கிங் ஆகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. முதல் நாளில் மட்டும்
ரூ.8.50 கோடி முதல் 10 கோடி வரை இந்தியாவில் படம் வசூல் செய்ய வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்படுகிறது. அப்படி 10 கோடிக்கு மேல் வசூல் செய்தால் அதிகம் வசூலித்த படங்களின் லிஸ்டில் தடக் 5வது இடத்தை பிடிக்க வாய்ப்பு உள்ளது என்கிறார்கள்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!