ஜி.வியின் 100 சதவீதம் காதல் செப். ரிலீஸ்

சென்னை:
ஜி.வி. பிரகாசின் 100 சதவீதம் காதல் படம் வரும் செப்டம்பர் ரிலீஸ் ஆகும் என்று தெரிய வந்துள்ளது.

சந்திரமவுலி எம்.எம். இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் – ஷாலினி பாண்டே இணைந்து நடித்துள்ள 100 சதவீதம் காதல் படத்தை செப்டம்பரில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

நாகசைதன்யா – தமன்னா நடித்து ஆந்திராவில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம், 100 சதவீதம் லவ். இந்த படம் 100 சதவீதம் காதல்’ என்ற பெயரில் தமிழில் உருவாகி வருகிறது.

ஜி.வி.பிரகாஷ் – ஷாலினி பாண்டே இணைந்து நடிக்கும் இந்த படத்தை சந்திரமவுலி எம்.எம். இயக்கியிருக்கிறார். இந்த படம் செப்டம்பர் மாதம் திரைக்கு வருகிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!