ஜி.வி.பிரகாஷின் “அடங்காதே” ட்ரெய்லர் வெளியீடு

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள அடங்காதே படத்தின் ட்ரெய்லர்  தற்போது வெளியாகியுள்ளது.

இயக்குநர் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் நடித்துள்ள படம் அடங்காதே. இப்படத்தில் சரத்குமார் அரசியல்வாதியாகவும், மந்த்ரா பேடி காவல்துறை அதிகாரியாகவும் நடித்துள்ளனர். இப்படத்த்கின் நாயகியாக சுரபி நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பி.கே. வர்மா ஒளிப்பதிவு செய்துள்ளார்.இப்படத்தை ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம்  தயாரித்துள்ளது.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்களை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.

Sharing is caring!