ஜி.வி.பிரகாஷுடன் கூட்டமைக்கும் விஜய்

இயக்குநர் ஏ.எல்.விஜய்யின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியானப் படம் லக்‌ஷ்மி. பிரபுதேவா, தித்யா பாண்டே, ஐஸ்வர்யா ராஜேஷ் இதில் நடித்திருந்தார்கள். நடனத்தை மையப்படுத்தி எடுக்கப் பட்ட இந்தப் படம் ரசிகர்களையும் கவர்ந்தது.

மறைந்த அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தை இவர் இயக்குவதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின. இந்நிலையில் தனது நெருங்கிய நண்பர் ஜி.வி.பிரகாஷை வைத்து தனது அடுத்தப் படத்தை இயக்க தயாராகிவிட்டார் விஜய்.

அந்தப் படத்திற்கு ‘வாட்ச்மேன்’ என டைட்டில் வைக்கப் பட்டுள்ளதாம். இதைப் பற்றி அதிகாரப் பூர்வமான அறிவிப்பு வரும் என காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். விஜய்யின் அதிகப் பட்ச படங்களுக்கு இசையமைத்தவர் ஜி.வி.பிரகாஷ். மற்ற இயக்குநர்களின் படங்களை விட விஜய்யின் படத்திற்கு அதிக மெனக்கெடுதலுடன், நல்ல இசையை தருவார். அதனால் இவர்கள் இருவரும் இணையும் வாட்ச்மேன் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு இப்போதே அதிகரித்திருக்கிறது.

Sharing is caring!