ஜி.வி. பிரகாஷ் இசையில் ராப் நடனம் ஆட உள்ளார் நடிகர் யோகி பாபு

சென்னை:
யோகி பாபு தற்போது ஒரு படத்தில் ராப் நடனம் ஆடுகிறார் என்று தெரிய வந்துள்ளது.

யோகி பாபு கோலிவுட்டின் பிரபலமான காமெடியன் ஆகிவிட்டார். விவேக், வடிவேலுவுக்கு பிறகு இவருக்கும் பெரும் ரசிகர்கள் கூட்டம் உருவாகிவிட்டது. நயன்தாராவுடன் கோலமாவு கோகிலா படத்தில் ஒரு பாடலுக்கு ஹீரோ போல வந்து டான்ஸ் ஆடியது ஹிட்டாகிவிட்டது.

தற்போது அவர் ஜோம்பி, கூர்கா படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.
தற்போது வாட்ச் மேன் படத்தில் யோகி பாபு ராப் நடனம் ஆடுகிறாராம். அதில் அவருக்கு ஜோடியாக இளம் நடிகை நடனமாடுகிறாராம்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த பாடல் மிகவும் ஹைலட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!