ஜி.வி. பிரகாஷ் வெளியிட்ட சதிஷின் வீடியோ

சீமராஜா படத்தை இயக்கிய, எழில் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடித்து வருகிறார்.இந்த படத்தை அபிஷேக் ஃபிலிம்ஸ் நிறுவனம்  தயாரிக்கிறது.

சி.சத்யா இசையமைக்கும் இப்படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நிகிஷா படேல், நகைச்சுவை நடிகர் சதிஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். எழிலின் வழக்கமான காமெடி கலந்த காதல் படமாக இது உருவாகும் என்று தெரிகிறது.

இந்நிலையில் இந்த படத்தின், படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோவை, தனது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார் ஜி.வி. அதில் சதிஷ் புதிய கெட்டப்பில் இருக்கிறார், அவரது தோற்றமே படம் நல்ல காமெடியான படமாக இருக்கும் என தெரிவிக்கிறது.

 

Sharing is caring!