‘ஜீனியஸ்’ வர்த்தக ரீதியில் வெற்றியடையவில்லை

சுசீந்திரன் இயக்கியுள்ள ‘ஜீனியஸ்’ கடந்தவாரம் அதாவது அக்டோபர் 26-ஆம் தேதி வெளியானது. சுசீந்திரனுக்கு 2 கோடி சம்பளம், தயாரிப்பு செலவு 2.5 கோடி ஆக மொத்தம் 4.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இந்தப்படம் வர்த்தக ரீதியில் வெற்றியடையவில்லை.

இப்படத்தின் தயாரிப்பாளரும், ஹீரோவுமான ரோஷன் மீண்டும் தானே ஹீரோவாக நடித்து ஒரு படத்தை தயாரித்து இயக்கப்போகிறாராம். ஜீனியஸ் படத்துக்கு முன்பே ரோஷன் நடித்த ஒரு படம் பல வருடங்களாக பெட்டிக்குள் முடங்கிக் கிடக்கிறது. ஆனாலும் தன்னை ஹீரோவாக முன்னிறுத்த வேண்டும் என்பதற்காக அடுத்தடுத்து படங்களை தயாரிக்க இருக்கிறார்.

இது ஒரு பக்கம் இருக்க, ஜீனியஸ் படத்தையடுத்து ‘சாம்பியன்’, ‘ஏஞ்சலீனா’ ஆகிய படங்களையும் இயக்கி வருகிறார் சுசீந்திரன். இந்த இரண்டு படங்களும் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் பாரதிராஜாவும், சசிகுமாரும் முக்கிய கேரக்டர்களில் இணைந்து நடிக்க ‘கென்னடி கிளப்’ என்ற படத்தையும் இயக்க உள்ளார். இந்தப்படத்தை இயக்குவதற்கு தான் ஏற்கனவே வாங்கிய சம்பளத்தை விட கூடுதலாக பெற்றுள்ளார் சுசீந்திரன். ‘கென்னடி கிளப்’ படத்தை ‘நல்லுசாமி பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் சுசீந்திரனின் தம்பி தாய் சரவணன் தயாரிக்கிறார்.

Sharing is caring!