ஜீவா கதாநாயகனாக நடிக்கும் ‘ஜிப்ஸி’யில் சன்னி வெயின்

குக்கூ, ஜோக்கர் ஆகிய படங்களை தொடர்ந்து, ராஜுமுருகன் இயக்கி வரும் படம் ‘ஜிப்ஸி’. ஜீவா கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் துல்கர் சல்மானின் நண்பரும் மலையாள நடிகருமான சன்னி வெயின் நடிக்கிறார்.. துல்கர் சல்மான் அறிமுகமான செகண்ட் ஷோ என்ற படத்தில்தான் இந்த சன்னி வெய்னும் அறிமுகமானார். சமீபத்தில் நிவின்பாலி நடிப்பில் வெளியான காயங்குளம் கொச்சுன்னி என்கிற படத்தில் கூட மிரட்டல் வில்லனாக நடித்தவர் தான்.

ஜிப்ஸி படத்தில் இவரது கதாபாத்திரம் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தோழர் பாலன் என்கிற புரட்சிகரமான கதாபாத்திரமாக உருவாக்கப்பட்டுள்ளதாம். கடந்த சில நாட்களாக இந்த படத்தின் படப்பிடிப்பில் இணைந்து நடித்து வருகிறார் சன்னி வெய்ன்.. சமீபத்தில் கூட இந்த படத்தின் பாடல் புரோமோவுக்காக கம்யூனிஸ்ட் கட்சி உட்பட பல போராளிகளை ஒன்றிணைத்து பாடல் காட்சியை படமாக்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

Sharing is caring!