ஜீவிபி கருணாநிதிக்கு புகழாரம்

கலைஞரின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் புகழாஞ்சலி செலுத்தியுள்ளார்.

இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நலக் குறைவால்  நேற்று முன்தினம் காலமானார். தமிழ் திரை துறைக்கு எண்ணற்ற பணியாற்றியுள்ள கருணாநிதிக்கு பல திரையுலக கலைஞர்களும் அஞ்சலி செலுத்தினர். நேரில் வரமுடியாத சிலர் இரங்கல் செய்தி வெளியிட்டு தங்கள் வருத்தத்தை தெரிவித்து கொண்டனர்.

கருணாநிதியின் மறைவு குறித்து ஜீ.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், “கற்பனையில் மட்டுமே சாத்தியப்பட்டதை தன் வாழ்வில் நிகழ்த்திக் காட்டிய  அரசியல் பெரும் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞரின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு” என்று தெரிவித்திருக்கிறார்.

Sharing is caring!