ஜீ.வி.பிரகாசின் குப்பத்து ராஜா யூ/ஏ சான்றிதழ் பெற்றது

நடிகர் ஜி.வி.பிரகாஷை வைத்து இயக்குனர் பாபா பாஸ்கர் இயக்கியுள்ள படம் ‘குப்பத்து ராஜா’. இந்தப் படத்தின் கதாநாயகிகளாக பல்லக் லால்வாணி, பூனம் பாஜ்வா ஆகிய இரண்டு பேர் நடித்துள்ளனர். மேலும், மிக முக்கிய கேரக்டரில் இயக்குநர் பார்த்திபன் நடித்துள்ளார்.

‘ஷி ஃபோக்கஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள  இந்தப் படத்திற்கு  ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.  சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் ஜி.வி.பிரகாஷ் படம் என்றாலே கிளாமருக்கும், ஹ்யூமருக்கும் பஞ்சமே இருக்காது . ஆகவே, ஏப்ரம் 5ம் தேதி திரைக்கு வர உள்ள குப்பத்து ராஜா திரைப்படத்திற்கான சென்ஸார் வேலைகள் முடிவடைந்து, யூ/ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.

Sharing is caring!