ஜெயம் ரவியின் அடங்க மறு படத்தின் டிரெய்லர் வெளியீடு

சென்னை:
நடிகர் ஜெயம் ரவியின் அடங்க மறு படத்தின் டிரெய்லர் வெளியாகி செம வரவேற்பை பெற்றுள்ளது.

நடிகர் ஜெயம் ரவி போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் அடங்க மறு படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இந்த டிரெய்லர் ரசிகர்களின் அமோக வரவேற்புடன் லைக், ஷேர் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது.

நடிகர் ஜெயம் ரவி ‘டிக் டிக் டிக்’ படத்துக்கு பிறகு நடித்து வரும் படம் ‘அடங்க மறு’. இந்த படத்தை அறிமுக இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கியுள்ளார். ஜெயம் ரவி அதிரடி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடித்துள்ளார்.

இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. தனி ஒருவன் படத்தின் வெற்றிக்கு பிறகு ஜெயம் ரவி மீண்டும் போலீஸ் வேடத்தில் நடித்திருப்பதால் இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ரசிகரகள் இந்த டிரெய்லரை வைரலாக்கி வருகின்றனர்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!